சிவ சின்னங்கள் :
சைவராய் இருப்போர் அணிய வேண்டிய சின்னங்கள் :
திரு நீறு :
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே ............
திருநீற்றின் பெருமை :
புகலி வேந்தர் திருஞான சம்பந்தர், மேலே கண்ட திருநீற்று பதிகத்தை பாடி கோயில் மடப்பள்ளி சாம்பர் பூசி, ஆலவாய்(மதுரை ) மன்னனாம் கூன்பாண்டியனின் வெப்பு நோயையும் கூனையும் மாற்றி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.
அக்கு(உருத்திராக்கம்) :
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராய் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே...
அக்கின் பெருமை :
ஈசனார் தம் கையில் உருதிராக்க மாலையை
எண்ணுகின்றாராம் .....
திருவைந்தெழுத்து :
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே ............
திருவைந்தெழுத்தின் பெருமை :
திருவாமூராளியம் திருநாவுக்கரசரை, சமண மன்னன், அவரை கல்லோடு கட்டி கடலுள் பாய்ச்சினான் . அப்போது திருநாவுக்கரசர் மேற்கண்ட நமசிவாய பதிகத்தை பாடி, நல்ல துணையாவது நமச்சிவாயவே என வேண்டினார் . கடல் மேல் கல் மிதந்தது.
உலகோர் சிவ சின்னங்களை அணிந்து இன்புற்றிருக்க வேண்டுமென்று, வேண்டும் சிவனடியேன் ......
இவண் ,
அடியேனின் ஆசிரியர் ஹரிஹர சுவாமிநாத தேசிகருக்கும் திருவாசக செந்நாவலர் மயிலை சத்குருநாத தேசிகருக்கும் வழி வழி அடிமை விக்ரமன்.
Slots - Casinos & Games | MapyRO
ReplyDeleteSearch for a Slot game developer in 여수 출장마사지 the city USA - see 진주 출장안마 MapyRO. 김천 출장안마 Play Slots 광양 출장안마 at Las Vegas' leading slot 경기도 출장샵 sites where you can win cash prizes.