Sunday, 28 July 2013

Siva Chinnangal

சிவ சின்னங்கள் :

சைவராய் இருப்போர் அணிய வேண்டிய சின்னங்கள் :

திரு நீறு :

மந்திரமாவது நீறு வானவர்மேலது  நீறு 
சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு 
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே ............

திருநீற்றின் பெருமை :
              புகலி வேந்தர்  திருஞான சம்பந்தர், மேலே கண்ட திருநீற்று பதிகத்தை பாடி கோயில் மடப்பள்ளி சாம்பர் பூசி, ஆலவாய்(மதுரை ) மன்னனாம் கூன்பாண்டியனின் வெப்பு நோயையும் கூனையும் மாற்றி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.

அக்கு(உருத்திராக்கம்) :

அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் 
தக்க வானவராய் தகுவிப்பது 
நக்கன் நாமம் நமச்சிவாயவே...

அக்கின் பெருமை :
                     ஈசனார் தம் கையில் உருதிராக்க மாலையை 
எண்ணுகின்றாராம் .....

   

திருவைந்தெழுத்து :

சொற்றுணை வேதியன்  சோதிவானவன் 
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ 
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் 
நற்றுணை யாவது நமச்சிவாயவே ............


திருவைந்தெழுத்தின் பெருமை :
                     திருவாமூராளியம் திருநாவுக்கரசரை, சமண மன்னன், அவரை  கல்லோடு கட்டி கடலுள் பாய்ச்சினான் . அப்போது திருநாவுக்கரசர் மேற்கண்ட நமசிவாய பதிகத்தை பாடி, நல்ல துணையாவது நமச்சிவாயவே  என வேண்டினார் .  கடல் மேல் கல் மிதந்தது.

உலகோர் சிவ சின்னங்களை அணிந்து இன்புற்றிருக்க வேண்டுமென்று, வேண்டும் சிவனடியேன் ......


இவண் ,
அடியேனின் ஆசிரியர் ஹரிஹர சுவாமிநாத தேசிகருக்கும்  திருவாசக செந்நாவலர் மயிலை சத்குருநாத தேசிகருக்கும் வழி வழி அடிமை விக்ரமன்.



Saturday, 27 July 2013

Saiva Tamil Mudhal Malar

விநாயக பெருமானார் துதி :

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் 
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே ............







 நமசிவாய வாழ்க   நாதன் தாழ்  வாழ்க....
இமை  பொழுதும் என்  நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...


 தில்லை அம்பல ஆடல்வல்ல பெருமான் அடி போற்றி




நால்வர் துதி :

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்  கோன் கழல் போற்றி 
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன்தொண்டர் அடி போற்றி 
ஊழி மலி திருவாதஊரர் திருத்தாழ் போற்றி போற்றி .........